8 Apr 2024

இப்போதில்லாவிட்டால்…

தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் வேண்டுகோள்


    நாட்டின் விடுதலைக்காகத் தீரமுடன் போராடிய மக்களின் விருப்பார்வங்களிலிருந்து உருவான நமது அரசியல் சட்டத்தை ஒழித்துக்கட்ட, அன்னியராட்சிக்கு சேவகம் செய்து வந்தவர்களின் கூட்டுமுகமான பாஜக ஆட்சி தொடர்ந்து முயற்சித்துவருகிறது. அரசியல் சாசனத்தின் மாண்புகளுக்கு ஒத்திசைவாகவும் சுதந்திரமாகவும் இயங்கவேண்டிய நாடாளுமன்றம்/ சட்டமன்றங்கள், நீதித்துறை, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பாஜகவின் குறுகிய மதவாதத்திற்கும் கார்ப்பரேட் சுரண்டலுக்கும் கீழ்ப்படியும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டுள்ளன. 

    கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது மனித சுபாவம். எனவேதான் நமது அரசியல் சாசனம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அனைவருக்குமே உரிமையாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும்கூட கருத்துரிமையையும் விமர்சிக்கும் உரிமையையும் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு கருத்தை வெளிப்படுத்திவிட்டு சுதந்திரமாக இருந்து விடவே முடியாது என்கிறது ஒன்றிய பாஜக ஆட்சி. மனிதநிலையிலிருந்து நம்மைத் தாழ்த்தும் இந்தக் கொடுங்கோல் ஆட்சியை இப்போது வீழ்த்தாவிட்டால் இனி தேர்தல் என்பதே பழங்கதையாகிப்போகும்.

    தமது முற்போக்கான கருத்துகளுக்காக சமூகத்தின் நன்மதிப்பினைப் பெற்றிருந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற சிந்தனையாளர்கள் அவர்களது கருத்துகளுக்காகவே சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள்.

    ஒன்றிய பாஜக அரசு, தனது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள்மீது விமர்சனமும் மாற்றுக்கருத்தும் கொண்டுள்ள ஆளுமைகள் பலரையும் பீமாகோரேகான் பொய்வழக்கில் சிக்கவைத்து ஆண்டுக்கணக்கில் சிறைவைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பெறத் துணைநின்ற ஸ்டேன்ஸ் சுவாமிக்கு கைதிக்குரிய உரிமைகளை மறுத்துச் சிறையிலேயே சாகடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறையை ஏவியது. உண்மையை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள்  மீது உபா போன்ற கொடிய சட்டங்களைப் பாய்ச்சுகிறது. எஞ்சியுள்ள மக்களும்கூட நாட்டைத் திறந்தவெளிச் சிறைச்சாலையாக உணருமளவுக்கு அரசின் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் மூர்க்கமடைந்து வருகின்றன. அச்சமற்று வாழ்வதற்கும் படைப்புச் சுதந்திரத்திற்கும் தடையாக உள்ள எதையும் எதிர்க்கிற இயல்புணர்விலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை  மேற்கொள்வதாக இந்தக் கூட்டறிக்கை அறிவிக்கிறது.  

**

        வாக்குரிமையின் மூலம் மக்கள் வழங்கியத் தீர்ப்புகளைத் திருடுகிறது  பாஜக. தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற லஞ்சப்பணத்தை வாரி இறைத்து இதுவரை 182 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஒன்பது மாநில அரசுகளைக் கவிழ்த்து தனது ஆட்சியை அமைத்திருக்கிறது. தேர்தல் களத்தை சமமற்றதாக்கும் விதமாக எதிர்க்கட்சிகளின் வங்கிக்கணக்கை முடக்குவது, அரசின் பல அமைப்புகளை ஏவி எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களைச் சிறையிலடைப்பது என நாடாளுமன்ற ஜனநாயகத்தையே சிதைத்துவருகிறது பாஜக.

**

        உணவு, உடை, மொழி, சமயம், தெய்வம், வழிபாட்டு முறை, நம்பிக்கை, கொண்டாட்டம், சடங்கு என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தனித்துவம் கொண்ட மக்கள் சமுதாயங்கள் இணங்கிவாழும் பேறுபெற்றது நம்நாடு. ஒளிரும் வானவில்லைப் போன்ற இந்தப் பன்மைத்துவம்தான் நம் நாட்டின் அழகு, வலிமை. அதனாலேயே விடுதலைப் போராட்டம் கட்டமைத்த மக்கள் ஒற்றுமைதான் இந்திய வளங்களிலேயே மிகவும் செறிவானதெனப் போற்றப்படுகிறது. ஆனால் இந்தப் பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் அடித்து நொறுக்கித் தட்டையாக்கி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கடவுள், ஒரே தேர்தல் எனும் ஒரே..ஒரே முழக்கங்களோடு ஒருநபர் வல்லாதிக்கத்தை நோக்கி நாட்டை  நகர்த்துகிறது பாஜக. 

**

    சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் பாஜகவின் நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனியச்செய்துள்ளன. அகண்ட பாரதம் என்னும் அதன் முழக்கம் இறையாண்மையுள்ள அண்டைநாடுகளைச் சீண்டுவதாக உள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம், பட்டினியற்ற நிலை, கருத்துரிமை, ஊடகச் சுதந்திரம்,  பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உலகளாவிய அளவில் இந்தியா பலபடிகள் பின்தங்கியிருப்பதற்கு பாஜக ஆட்சியே காரணம்.

    கொரானா பேரிடரை அறிவியலுக்குப் புறம்பான வகையில் கையாண்டதுடன் அதையும் தனது இஸ்லாமிய வெறுப்பரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டது பாஜக ஆட்சி. பொது முடக்கக் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்ட அது,        

    புலம்பெயர்த் தொழிலாளர்களை நிர்க்கதியாக்கி விரட்டியது. தமது நலன்களுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை பகைநாட்டுப் படையினர் போல சித்தரித்து தாக்குதல் நடத்தி பலரை கொன்றது.    

    உலகம் இதுவரை கண்டிராதபடி 7.5 இலட்சம் கோடி ரூபாயளவுக்கு நிதி முறைகேடுகளைச் செய்துள்ளது  பாஜக ஆட்சி. அது தேர்தல் பத்திரம் மூலம் செய்துள்ள டிஜிட்டல் வழிப்பறியைப் பார்த்து உலகமே திகைத்து நிற்கிறது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரம் சமகாலத்திற்குரியதாக இருக்கவில்லை. அங்கு பெண்கள், தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. சிறுபான்மையினரது சொத்துக்களைப் பறிமுதல் செய்தல், வீடுகளை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குதல், அவர்களது வாழ்வாதாரங்களை முடக்குதல், அவர்கள் மீது வெறுப்பினைப் பரப்புதல் ஆகிய கொடூரங்கள் தீவிரமடைந்துள்ளன. மதப்பகைமையை உண்டாக்கி மக்களைப் பிளவுபடுத்திச் சமூகத்தை எப்போதுமே பதற்றத்தில் வைத்திருக்கும் பாஜக, தமிழ்நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் எவ்வகையிலும் ஏற்புடைய கட்சியல்ல. ஆனாலும் அந்தக் கட்சி அதிமுகவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மறைமுகமாக நிழலாட்சி நடத்தி தமிழ்நாட்டின் நலன்களைக் காவுவாங்கியது.

**

    தமிழர் பண்பாட்டின் தொன்மையை எடுத்தியம்பும் கீழடி அகழ்வாய்வைப் பாதியில் நிறுத்தியது, ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுத்தது, பிறப்பால் எவ்வுயிரும் சமம் என முழங்கிய திருவள்ளுவர், அய்யா வைகுண்டர், சன்மார்க்கர் வள்ளலார் ஆகிய பேராளுமைகளை சாதிய, சனாதனவாதிகளாகச் சிறுமைப்படுத்துவது,  தமிழுக்குப் பெருமை சேர்த்த ராபர்ட் கால்டுவெல்லை இழிவுபடுத்துவது, நீட் விலக்கிற்கு ஒப்புதல் வழங்க மறுப்பது, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க மறுப்பது, பேரிடர்க்கால நிவாரணத்தொகையை வழங்க மறுத்தது என தமிழ் தமிழர் தமிழ்நாடு விரோதப்போக்குடன் செயல்படும் பாஜகவை இந்தக்காலம் முழுவதும் அதிமுகவும் பாமகவும் ஆதரித்து வந்துள்ளன. இஸ்லாமியரைத் தனிமைப்படுத்தும் நோக்குடன் திணிக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச்சட்டம் அதிமுக பாமக ஆதரவினால் தான் நிறைவேறியது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் எதிராளிகளாகக் காட்டிக்கொண்டு இருவேறு கூட்டணிகளாக போட்டியிட்டாலும் இரண்டையும் நிராகரிப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததாகும்.

    இந்தியாவின் வரலாற்றை இந்தியத்தன்மையுடன் எழுதப்போவதாகச் சொல்லிக்கொண்டு அதற்குகந்த குழுவினை அமைத்துள்ளது பாஜக ஆட்சி. திராவிடர்களின் சிந்துவெளிப் பண்பாட்டை ஆரியப் பண்பாடாகவும், ஆரியர்களை இந்தியாவின் பூர்வகுடிகளாகவும், தமிழ் உள்ளிட்ட இந்தியமொழிகள் அனைத்திற்கும் மூலமொழி சமஸ்கிருதமே என்றும் ஒரு கட்டுக்கதையை வரலாறு என்று திரிப்பதே இக்குழுவின் பணி. பாஜகவின் இந்த வரலாற்று மோசடிக்கு எதிரான தீர்ப்பினை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வழங்கி, சிந்துவெளிப் பண்பாட்டை ஜான் மார்ஷல் உலகுக்கு அறிவித்ததன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களைத் தொடங்குவோம்.

**

    மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமையையும் பன்மைத்துவத்தையும் தனித்துவத்தையும் காப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இந்தியா கூட்டணியை ஆதரிப்பது எழுத்தாளர்கள் கலைஞர்களின் சமூகப்பொறுப்பு எனக் கருதுகிறோம். தமிழ்நாட்டு மக்களும் அவ்வாறே இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.


எஸ்.வி. ராஜதுரை

அ. மார்க்ஸ்

வே.மு. பொதியவெற்பன்

பாமா

கவிஞர் இந்திரன்

க. பஞ்சாங்கம்

பெருமாள் முருகன்

பசு கவுதமன்

அரிமளம் சு. பத்மநாபன்

சமயவேல்

அ.ராமசாமி

மனுஷ்யபுத்திரன்

இமையம்

அறம்

கலாப்ரியா

சக்தி ஜோதி

சூர்யா சேவியர்

ஆழி செந்தில்நாதன்

நா. முருகேச பாண்டியன்

இரா. எட்வின்

கமலாலயன்

நீதிமணி

நக்கீரன்

யுக பாரதி

இரா. முருகவேள்

அ.முத்துக்கிருஷ்ணன்

மீரான் மைதீன்

யவனிகா ஸ்ரீராம்

கீரனூர் ஜாகீர் ராஜா

கவின்மலர்

விஜய் ஆனந்த்

சம்சுதீன் ஹீரா

அ. பாக்கியம் சங்கர்

அ. ஜெகநாதன்

எம்.எம். தீன்

சுதீர் செந்தில்

மதிக்கண்ணன்

சுகுணா திவாகர்

கவிதா பாரதி

தமிழ்மகன்

விஷ்ணுபுரம் சரவணன்

புலியூர் முருகேசன்

பழநி ஷஹான்  

அரி சங்கர்

யெஸ். பாலபாரதி

காமாட்சி

சக்தி சூர்யா

ந. இளங்கோ

சிலம்பு செல்வராஜ்

இ.பா. சிந்தன்

முகம்மது யூசுப்

ஷக்தி

நிவேதிதா லூயிஸ்

மதுக்கூர் ராம­லிங்கம்

ஆதவன் தீட்சண்யா

அருணன்

ச.தமிழ்ச்செல்வன்

சிகரம் செந்தில்நாதன்

சைதை ஜெ

நந்தலாலா

உதயசங்கர்

இலட்சுமிகாந்தன்

நாறும்பூநாதன்

எஸ்.ஏ. பெருமாள்

பக்தவச்சலபாரதி

சு.பொ. அகத்தியலிங்கம்

மயிலை பாலு

பிரளயன்

எம். சிவக்குமார்

வெண்புறா சரவணன்

கா. பிரகதீஸ்வரன்

ரோஹிணி

நவகவி

ஜீவி

தேனிசீருடையான்

ஸ்ரீரசா

முத்துநிலவன்

சுந்தரவள்ளி

அ.உமர்பாரூக்

ம.காமுத்துரை

ஜா.மாதவராஜ்

மலர்விழி

அய். தமிழ்மணி

ஆர். நீலா

ஏகாதசி

அ.கரீம்

எஸ்.இலட்சுமணப்பெருமாள்

ஜனநேசன்

கரிசல் குயில் கிருஷ்ணசாமி

இரா.தெ.முத்து

கிருஷி

எஸ்.காமராஜ்

கோவை சதாசிவம்

இரா. தனிக்கொடி

மு.முருகேஷ்

தக்கலை ஹலீமா

நிறைமதி

அ. பகத்சிங்

இக்பால்

சோழ நாகராஜன்

மதுரை நம்பி

அல்லி உதயன்

மு. ஆனந்தன்

நா.வே. அருள்

சிராஜுதீன்

அருள் செல்வி

முரசு ஆனந்த்

இளங்கோ கார்மேகம்

ஜீவபாரதி

கரன் கார்க்கி

ச.மதுசுதன்

செந்தில்

ராஜமாணிக்கம்

ராஜசங்கீதன்

ராஜிலா ரிஸ்வான்

நேசமித்திரன்

பெ.ரவீந்திரன்

எஸ். சண்முகம்

சிந்து ஜா

அமர்நாத்

தவில் விநாயகம்

ச. ப்ரியா

தங்கமுருகேசன்

ஜின்

பூபாளன்

அரவிந்த் ரவிச்சந்திரன்

லி.பா. சாரதி

ராசி.பன்னீர்செல்வம்

கவிஞர் கதிரை

ஜீவசிந்தன்

வல்லம் தாஜுபால்

ஓவியர் சரண்ராஜ்

ஓவியர் உமாபதி

பா. மகாலட்சுமி

முனைவர் இராச. கலைவாணி

நீலமேகம்

கவிஞர் ராசாராமன்

இளம் கவிஞர் சத்தியபிரியன்

பாடகர் உத்தமன்

வைகறை மஞ்சுளா

ரத்தின விஜயன்

சசி ரேகா

சரவணகாந்த்