21 Jun 2023

தமிழ்நாட்டில் பயிற்றுவிக்க இந்தியும் சமஸ்கிருதமும் படித்தவர் எதற்கு?

- தமுஎகச கண்டனம்
 
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்,  பகுதிநேர கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஆளெடுப்பது தொடர்பான  விளம்பரம் ஒன்றை இன்று நாளேடுகளில் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேர்வதற்கான கல்வித்தகுதி பற்றிய குறிப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது எம்.பில்., பட்டம் பெற்றிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு தமுஎகச வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. 
 
தமிழ்நாட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தில் பயிற்றுவிக்க தமிழும் ஆங்கிலமும் படித்தவர்களே போதுமானதாயிருக்கும் நிலையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் முதுநிலை/ எம்.பில்., படித்தவர்களை பணியமர்த்தும் இம்முயற்சி தமிழ்நாடு அரசின் மொழிக்கொள்கைக்கு எதிரானது. எனவே தற்போதைய விளம்பர அறிவிக்கையை வெளியிட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதனை திரும்பப்பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.       

தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்          

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

21.06.2023