கலை இலக்கிய விருதுகள்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2019

2019ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. 2019ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூல் / குறுந்தகடு இரண்டு பிரதிகள் 2020 பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அஞ்சல் / தூதஞ்சல் (கூரியர்) மூலம் அனுப்பப்பட வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி:
பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், 
57/1, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி,
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம்) 
மதுரை- 625001  தொலைபேசி: 0452-2341669 

பரிசீலனைக்கு வரும் நூல்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தேர்வாகும் நூல் / படம் ஒவ்வொன்றுக்கும் “தமுஎகச விருது”,  சான்றிதழ், தொகை ரூ.5000/ ஆகியவை தமுஎகச நடத்தும் விழாவில் வழங்கப்படும். 

விருதுகள் 

1. தோழர். கே. முத்தையா நினைவு விருது : தொன்மைசார்  நூல் 
2. கே.பாலசந்தர் நினைவு விருது: நாவல் 
3. சு.சமுத்திரம் நினைவு விருது: விளிம்புநிலை மக்கள் குறித்த படைப்பு 
4. இரா. நாகசுந்தரம் நினைவு விருது: கலை இலக்கிய விமர்சன நூல் 
5. வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன் – செல்லம்மாள் (ப.ஜெகந்நாதன்) நினைவு விருது: கவிதைத்தொகுப்பு 
6. அகிலா சேதுராமன் நினைவு விருது: சிறுகதைத்தொகுப்பு 
7. வ.சுப.மாணிக்கனார் நினைவு விருது: மொழிபெயர்ப்பு 
8. பா.இராமச்சந்திரன் நினைவு விருது: குறும்படம் 
9 என்.பி.நல்லசிவம் - ரத்தினம் நினைவுவிருது: ஆவணப்படம்

தமுஎகச வழங்கும் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதுகள் 

10. குழந்தைகள் இலக்கிய நூல் 
11. மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் 

பின்வரும் விருதுகள் ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன:   

12. மு.சி.கருப்பையா பாரதி - ஆனந்த சரஸ்வதி நினைவு விருது: நாட்டுப்புறக் கலைச்சுடர்
13. மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு விருது: இசை ஆளுமை
14. த.பரசுராமன் நினைவு விருது : நாடக ஆளுமை
15. மேலாண்மை பொன்னுச்சாமி நினைவு விருது: பெண் படைப்பாளுமை